கடும் கோபத்தில் விஜயகாந்த்... பிரேமலதா கட்சி அலுவலகம் வராததன் பரபரப்பு பின்னணி...!
கூட்டணி விவகாரத்தால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு பிரேமலதா தான் காரணம் என விஜயகாந்த் செம டென்சனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி விவகாரத்தால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு பிரேமலதா தான் காரணம் என விஜயகாந்த் செம டென்சனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், இரண்டு கட்சிகளுமே தேமுதிகவிற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக தேமுதிக மீதிருந்த ஹைப் குறைந்து தற்போது தேமுதிகவின் பெயர் டோட்டல் டேமேஜ் ஆகியுள்ளது. துவக்கம் முதலே கேப்டன் திமுகவுடன் தான் கூட்டணி என்று ஆர்வம் காட்டினார். ஆனால் அந்தப்பக்கம் வைட்டமின் ப கொடுக்க வாய்ப்பில்லை என்று முதலிலேயே கூறிவிட்டார்கள்.
இதனால் பிரேமலதா திடீரென தனது பார்வையை அதிமுக பக்கம் திருப்பினார். ஆனால் அங்கு பாமக இருப்பதால் அந்த கட்சியை விட கூடுதல் இடங்கள் வேண்டும் என்று தேமுதிக பேசி வந்தது. இதற்கு அதிமுக பிடி கொடுக்காத காரணத்தினால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. அப்படி என்றால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் எட்டு தொகுதிகளை கேட்டிருக்கிறது தேமுதிக அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அதிமுக கைவிரித்துள்ளது.
இந்த நிலையில் தான் கேப்டனிடம் சொல்லிவிட்டு துரைமுருகனை சென்று சந்தித்தது தேமுதிக டீம். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனால் அதிமுகவுடன் தொடர்ந்து பேசலாம் என்று பிரேமலதா சுதீசுக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனை ஏற்றே ஓரிரு நாளில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிக்கப்படும் என்று சுதீஷ் தெரிவித்துள்ளார். சுதீஷ் இப்படி கூறியது தான் தாமதம் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கேப்டனிடம் கொந்தளித்துள்ளனர். பாமகவை விட குறைவான தொகுதிகளுடன் நாம் ஏன் அந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். அப்படி என்றால் ஊடகங்களில் வருவது போல் அதிமுக தான் பணம் தருகிறதா? என்கிற ரீதியில் கேள்விகள் எழுந்துள்ளன.
தன் முன்னால் பேசக்கூட பயப்படுபவர்கள் தற்போது இப்படி கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாக பிரேமலதா தான் காரணம் என்று கேப்டன் நினைத்துள்ளார். இதனால் அவரிடம் செம டென்சனான கேப்டன், கட்சியை குட்டிச் சுவராக்கிவிட்டீர்கள், நீயும் உன் தம்பியும் இன்னும் என்ன எல்லாம் செய்யப் போகிறீர்கள் என்று கனத்த மனதுடன் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட அப்செட்டால் தான் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பங்கேற்கவில்லையாம். விஜயகாந்தை தனியாக கடந்த சில நாட்களில் தற்போது தான் பிரேமலதா அனுமதித்துள்ளார். இதனிடைய தன்னை பற்றி கேப்டனிடம் போட்டுக் கொடுத்த நிர்வாகிகள் மீது பிரேமலதா செம கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.