dmdk sudheesh complaint about rk nagar election
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்வதாக குற்றம்சாட்டினர்.
ஆர்.கே.நகர் தெகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார். இவர் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தண்டையார்ப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தே.மு.தி.க. தேர்தல் பணிமனை அலுவலகத்தை எல்.கே.சுதீஷ் திறந்து வைத்தார். பின்னர் மதிவாணன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

வேட்பாளருடன் சென்ற தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணத்தை நம்பி போட்டியிடுகின்றன என்று தெரிவித்தார்.
இரு கட்சிகளும் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரைபட்டுவாடா செய்வதாக சுதீஷ் தெரிவித்தார். ஆனால் நாங்கள் மக்களை மட்டுமே மக்களை நம்பி போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்
மக்கள் பணத்தை விரும்பாமல் மாற்றத்தையே விரும்புவதால் அந்த மாற்றத்தை நாங்கள் அளிப்போம் என்றும் சுதீஷ் தெரிவித்தார்.

விரைவில் விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
அ.தி.மு.க.வை விட தி.மு.க. விளம்பரங்கள் தொகுதியில் அதிகம் உள்ளது எனவும் இதனை வேடிக்கை பார்க்காமல் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுதீஷ் கூறினார்.
