தேதிமுக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து அவர்  கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுதொடர்பாக தேமுதிக விளக்கம் அளித்துள்ளது. அதில், “6 மாதங்களுக்கு ஒரு முறை விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது வழக்கம். அதன்படி மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும், அந்த அறிகுறிகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டன. விஜயகாந்த் தற்போது பூரண நலத்துடன் உள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.