பேச்சு திறன் உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார் விஜயகாந்த். கடந்த முறை அவர் அங்கே சிகிச்சையில் இருந்தபோதுதான் இங்கே கருணாநிதி காலமானார். அன்று வீடியோ மெசேஜில் அவர் அனுப்பிய ‘அழுகை அஞ்சலி’யை பார்த்து ‘விஜயகாந்த் இவ்வளவு டல்லா இருக்கிறாரே! பேச்சு இன்னும் வரவேயில்லையே!’ என்று புலம்பினர் அவர்து தொண்டர்களும், மக்களும்.

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், நேரடியாக கருணாநிதியின் சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்தார். ரெண்டு அடி கூட நல்லபடியாக நடக்க முடியாமல் அவர் பட்ட பாடு, தே.மு.தி.க.வினரை உடைந்து நொறுங்க வைத்துவிட்டது. 

இந்நிலையில் நேற்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு  தன் கட்சி கரை வேட்டி மற்றும் வெள்ளை சட்டையில் பக்காவாக ஒரு சோபாவில் அமர்ந்து குடியரசு தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார் விஜயகாந்த். எதுவுமே புரியாமல் இருந்த அவரது பேச்சில் எக்கச்சக்க முன்னேற்றம். ஓரளவு தெளிவாகவே இருக்கிறது வார்த்தைகள். திரும்பத் திரும்ப பேச வைத்து கட் பண்ணி கட் பண்ணி, சேர்த்துதான் வீடியோவை அனுப்பியுள்ளனர். ஆனாலும் முன்னேற்றம் வெளிப்படையாய் தெரிகிறது. 

இந்த வீடியோவை பார்த்துவிட்டு, தே.மு.தி.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் குஷி மூடுக்கு போய்விட்டனர். ‘தலைவர் பேச்சு புரியுது. சிங்கம் மீண்டும் மீண்டு வருது. இனி தேர்தல்களில் பழையபடி அடிச்சு தூக்கிடலாம்.’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். 

இந்நிலையில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் இணைந்த கூட்டணியில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. இரண்டும் இணைகின்றன. அமெரிக்காவில் இருந்தபடியே கூட்டணி விஷயங்களை பிரேமலதா மேற்கொண்டு வருகிறார், அ.தி.மு.க.விடம் கணிசமான நிபந்தனைகளையும், சலுகைகளையும் எதிர்பார்க்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இதற்கு அ.தி.மு.க. மறுத்து வந்த நிலையில், விஜயகாந்தின் உடல் முன்னேற்றத்தை காரணமாக காட்டி ‘கேப்டன் மீண்டு வந்துட்டார். தேர்தலுக்குள் பக்காவாக ரெடியாகிடுவார். எங்களோட எதிர்பார்ப்புகளை கூட்டணியில் நீங்க நிறைவேற்றலேன்னா, தனியா நிற்க நாங்க தயார்.’ என்கிற அளவுக்கு பேச துவங்கியிருக்கிறதாம் தே.மு.தி.க. தரப்பு. 

இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே போய்விட்டது அ.தி.மு.க. தலைமை. ஏற்கனவே ‘விஜயகாந்த் கட்சிக்காக என் தொகுதிகளை நான் விட்டு தரமுடியாது. என்று சி.வி. சண்முகம், சம்பத் ஆகிய அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில், விஜயகாந்த் தரப்பின் இந்த கெத்துப் பேச்சால் டென்ஷனான எடப்பாடியார் தரப்பு, தூதுவர்களை மிக மிக கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனராம்.

உங்க தலைவரின் உடல்நிலை முன்னேறியதில் சக மனுஷனாய் சந்தோஷப்படுறோம். ஆனால் இதை வெச்சுகிட்டு பழைய தே.மு.தி.க. நாங்க!ன்னு ஆட்டம் போட நினைக்காதீங்க. அந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. கூட்டணிக்குள் ஓவர் அதிகாரம் காட்ட நினைச்சால் நாங்க பார்த்துட்டு இருக்க மாட்டோம்.” என்று கடிந்துவிட்டார்கள் என தகவல்.