தேமுதிக கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..! 

தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் 3 மணி நேர ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்கு வழங்கப்பட்ட விருப்பமனுக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 370க்கும் மேற்பட்டோர் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளனர். இது குறித்து,அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவிக்கும் போது,"தேமுதிகவின் கூட்டணி ஏற்கெனவே உறுதியான ஒன்று. அது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளனர். 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக கூட்டணி குறித்து சுமூகமான முடிவை எடுக்கும் என தெரிவித்து உள்ளார்.