இழுத்தடிக்கும் விஜயகாந்த்... அப்செட்டான மோடி... பதற்றத்தில் அதிமுக..!
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? இல்லையா? என்பது பற்றி தேமுதிக நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? இல்லையா? என்பது பற்றி தேமுதிக நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில், பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் தேமுதிக கட்சி இடம் பெறுமா என்று பெரும் ஐயமாகவே உள்ளது. இதற்காக பல கட்டங்களாக அதிமுக மற்றும் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனாலும், உடன்பாடு எட்டப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் கூட்டணியில் தேமுதிக வந்தே ஆக வேண்டும் என்று டெல்லி மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து இதில் ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கண்டிப்பாக இடம் பெறுவார்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும்" என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி நாளை சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்தை கூட்டணியில் இணைத்து பங்கேற்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால், கூட்டணி முடிவை நாளை அறிவிப்பதாக தேமுதிக ஊசலாட்டம் காட்டி வருவதால் பாஜக கடும் அதிருப்தியாகி உள்ளது. தான் சென்னை வரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அத்தனை தலவைர்களையும் மேடையேற்ற வேண்டும் என மோடி கட்டளையிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்த் காலதாமதம் செய்து வரும் தகவல் மோடிக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அப்செட் ஆகியதாக தகவல் கசிந்து வருகிறது.