dks elakovan statment

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். இதில்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுகவில் குஷ்பு பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அப்போது தான் குஷ்பு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும் திமுகவினரும் மறக்கவில்லை” என்று திருநாவுக்கரசர் பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

“முட்டை, செருப்பால் அடித்து திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இச்செய்தி தொடர்பாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முட்டை, செருப்பால் அடித்து திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார். திமுகவினர் யாரும் குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை, தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.