புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். புலியைப் பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு புரியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் கி.வீரமணி.
திருச்சி புத்தூர் பகுதியில் திராவிட கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கி.வீரமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி, 'ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்ற பிரிவு பேதம் இருக்கக்கூடாது என்பதைச் சொல்லி பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக சுயமரியாதை மாநாட்டில் செங்கல்பட்டில் நடத்தினார் பெரியார்.

இந்த மாநாட்டில் சொத்துரிமை ,படிப்புரிமை , உத்யோக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களுக்கு சொத்துரிமை என்கிற அம்பேத்கரின் சட்டத்தை இந்து சட்ட மசோதாவில் சனாதனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று சொன்னவர், பிரதமர் சோனியாகாந்தி தலைமையில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது திமுக அங்கம் வகித்த போது இந்த கூட்டணியில் சொத்துரிமைச் சட்டம் நிறைவேறியது.
பெண்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை திராவிட மாடல் ஆட்சி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. பெண்களை இல்லத்தில் அடக்கி வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. பெண்ணடிமை பெண்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்தையும் நீக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியாகும். திராவிட இயக்கங்களில் ஆதினம் கிடையாது.
குறிப்பாக சூத்திரர்கள் சன்னியாசியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு செயல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது. திமுக ஒருபோதும் பின்வாங்காது. அப்படி பின் வாங்கினாலும் அது பாய்வதற்காக தானே தவிர தங்குவதற்காக அல்ல. அது புலியை பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். புலியை பற்றி தெரியாத புண்ணாக்குகளுக்கு தெரியாது' என்று கூறினார்.
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!
இதையும் படிங்க : ”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்
