Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்காக ஓசியில் 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்.. ஆதாரத்துடன் வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி..!

கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

diwali festivel...1500 kg Avin Sweet Parcel former minister Rajendra Balaji
Author
Salem, First Published Jul 4, 2021, 12:07 PM IST

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஆவின் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். 

சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார். 

diwali festivel...1500 kg Avin Sweet Parcel former minister Rajendra Balaji

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர்;- கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக 234 பேர்  முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 634 முதுநிலை மற்றும் இளநிலை  ஆலை பணியாளர்களை நியமிக்க  முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

diwali festivel...1500 kg Avin Sweet Parcel former minister Rajendra Balaji

அந்தப் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும்  விற்பனை 1.50 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 22 நிலையங்கள்  உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என எச்சரித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios