தருமபுரி கிழக்கு மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;- தருமபுரி மாவட்டத்தை, கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தருமபுரி கிழக்கு - தருமபுரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

1. தருமபுரி கிழக்கு மாவட்டம்

பாப்பிரெட்டி
அரூர் (தனி)
தருமபுரி

2. தருமபுரி மேற்கு மாவட்டம்

பாலக்கோடு
பென்னகரம்

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் தருமபுரி கிழக்கு மற்றும் தருமபுரி மேற்கு  ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.

மாவட்டப் பொறுப்பாளர்கள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்

கழக நிர்வாக வசதிக்காகவும் , கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற தருமபுரி கிழக்கு தருமபுரி மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்.

மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்;-

தருமபுரி கிழக்கு       

பொறுப்பாளர்                                  -  பெ.சுப்ரமணி

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்  - நாட்டான் (எ) பாலு
                                                                   என்.சந்திரமோகன்
                                                                   டி.முனிராஜ்
                                                                  எஸ்.வாசுதேவன்

தருமபுரி மேற்கு மாவட்டம் 

பொறுப்பாளர்                                  -      பி.என்.பி.இன்பசேகரன்

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்  -   ஜி.வி.மாதையன்
                                                                   டி.சுப்பிரமணி
                                                                   ஆ.மணி
                                                                   கா.காளியப்பன் இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.