Divakaran join hand with edappadi palanisamy

இனி நீ எனக்கு தம்பியே இல்ல, என்னோட போட்டோவோ இல்ல பெயரையோ யூஸ் பண்ணக்கூடாது என சின்னஅம்மி ஆர்டர் போட்டதால் திவாவுக்கு ஒரே ஷாக், அக்கா பெயரை சொல்லி அரசியல் செய்யலாம்னு நெனச்சா, இப்போ அதுக்கும் ஆப்படிசிட்டானே அக்காள் மகன் என நோந்துப்போனாராம் மாமா. பையனுக்கு பண்ணும் கொடுக்கல, கட்சியிலயும் சேத்துக்கல, ஜெயா டிவி யில வேலையும் தரல இப்படி நம்மள கழட்டி விட்டுட்டு வேடிக்கைப் பார்க்கிறானே என பேஜாரானாராம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படியே போயக்கிட்டுருந்த, மன்னார்குடி குடும்பத்துல ஒரு பங்க்ஷன் நடந்துச்சி, என்னன்னா? சின்ன பாஸ் இருக்கருல்ல அதாங்க ஜெய் திவா மகன் ஜெய் ஆனந்த்க்கு தான் அவருக்கு. 25 வது பிறந்தநாள். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் போட்டு செம்ம ரகளையா நடந்ததாம். அப்போ அவரு ‘ஜூனியர் பாஸ்’ என எழுதப்பட்ட மெகா சைஸ் கேக்கை வெட்டினார்.

பிறந்தநாள் விழாவுக்கு வந்தவர்கள் தினகரனை திட்டித் தீர்க்கவே, யாரும் அவசரப்படாதிங்க ‘ 23 ஆம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அதுக்குப் பிறகு எல்லாமே செம்ம வெயிட்டு தான்! என டிவிஸ்ட் வச்சாராம். வந்திருந்தவர்களுக்கு ஒண்ணுமே புரியலயாம். ‘என்ன பாஸ் 23-ம் தேதி?” என பலரும் கேட்டார்களாம். ‘23-ம் தேதி இனிப்பு கொடுத்து அது என்னண்ணு உங்களுக்கு சொல்றேன்!” என்று சொன்னாராம் ஜெய்.

என்ன திட்டம் வைத்திருக்கிறார் திவாகரன் என்று மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். “திவாகரனை பொறுத்தவரை அம்மா அணி என்று தொடங்கினாலும், அதை அதிமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். தனிக் கட்சி தொடங்கி நடத்துவது எல்லாம் முடியாத காரியம் என்பது அவருக்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய் ஆனந்த் சென்னை வந்திருந்தார். அப்போது ஈக்காட்டுதாங்கல் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜெய் ஆனந்த்தை சந்தித்தார் அதிமுகவில் உள்ள அமைச்சர் ஒருவர். கிட்டதட்ட இரவு 12 மணி வரை இருவரும் பேசியிருக்கிறார்கள்.

‘கட்சி தொடங்க வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்கு நோக்கம் இல்லை. தினாகிட்ட இருந்து நேரடியாக அதிமுகவில் சேர்ந்தால், ஏதோ எடப்பாடியார் சொல்லி நாங்க செஞ்ச மாதிரி ஆகிடும். நாங்க உங்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கோம். அப்பாவுக்கும் , எனக்கும் கட்சியில் எதாவது பொறுப்பு கொடுக்கணும். அதுக்கு நீங்கதான் பேசணும்...’ என்று சொன்னாராம் சின்ன பாஸ். வந்திருந்த மான்புமிகுவும் எடப்பாடியுடன் பேசுவதாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனாராம். ஆனால், எடப்பாடியிடம் இந்த விஷயத்தை சொன்னப்போ, ‘அந்தக் பேமிலியே வேண்டாம்னு தான நாம ஒதுக்கி வெச்சிருக்கோம். மறுபடியும் அவங்களை உள்ளே விட்டா, கடைசியில் நம்மையே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிருவாங்க...’ டெண்ஷனானாராம்.

அதற்கு பதிலளித்த மாண்புமிகுவிடம், ‘அதான் சின்ன மம்மிக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதை அவங்களே தெளிவாக சொல்லிட்டாங்க. அதனால்தான் அவங்களை சேர்த்துக்கலாம்னு சொல்றேன்...’ என்று சொன்னாராம். எடப்பாடியோ, ‘சரி யோசிச்சு எல்லோரும் பேசி முடிவு பண்ணுவோம்...’ என்று பட்டும் படாமல் சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், திவா தரப்பில் தஞ்சாவூரில் உள்ள ஒரு பிரபல ஜோதிடர் திலகத்திடம் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். ’23-ம் தேதி நாள் நல்லா இருக்கு. அன்று நீங்க அதிமுகவில் இணைந்தால் சரியாக இருக்கும்..’என்று சொன்னாராம். அதன்படி 23-ம் தேதி எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதுதான் திவாகரன் திட்டம். அதற்கான காய் நகர்த்தலில்தான் ஈடுபட்டு வருகிறது திவாகரன் குடும்பம். நேற்று ஜெய் ஆனந்த் பிறந்தநாள் விழாவில், ‘எதுக்காகவும் எடப்பாடியாரையோ, பன்னீரையோ திட்ட வேண்டாம். நம்ம டார்கெட் தினா மட்டும்தான்!” என திவாவோ ஆதரவாளர்களுக்கு அட்வைஸ் பண்ணாராம். ஆக இதையெல்லாம் வெச்சுப் பார்த்தா, சீக்கிரமா அவங்க சொன்ன 23-ம் தேதி அதிமுக கூட சேந்துப்பாங்க போல!