சசிகலாவின் சகோதரர் திவாரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் ஏழாம் பொருத்தம். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இருவரும் இணைந்து செயல்பட்டனர். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக திவாகரன் தனிக் கட்சி தொடங்கி நடத்திவருகிறார். அவ்வப்போது டிடிவி தினகரனை வெறுப்பேற்றி பேட்டி அளிப்பதும் அவருடைய வாடிக்கை.
டிடிவி தினகரனை தனிமைப்படுத்தினால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் தெரிவித்துள்ளார். 
சசிகலாவின் சகோதரர் திவாரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் ஏழாம் பொருத்தம். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இருவரும் இணைந்து செயல்பட்டனர். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக திவாகரன் தனிக் கட்சி தொடங்கி நடத்திவருகிறார். அவ்வப்போது டிடிவி தினகரனை வெறுப்பேற்றி பேட்டி அளிப்பதும் அவருடைய வாடிக்கை. இந்நிலையில் திருச்சியில் அவர் அளித்துள்ள பேட்டியிலும் டிடிவி தினகரனை மையப்படுத்தி பேசினார்.

“டிடிவி தினகரனை நம்பி சென்ற எம்.எல்.ஏ.க்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. கடைசியில் அவர்களுக்கு பதவி பறிபோனதுதான் மிச்சம். சசிகலாவை ஏராளமான எதிரிகளிடம் இருந்து நான் காப்பாற்றி இருக்கிறேன். சசிகலாவுக்கு வெளியில் இருந்து எதிரி வந்திருந்தால் நான் சந்தித்திருப்பேன். உள்ளே உறவில் இருந்து வந்ததால் யோசித்துக்கொண்டிருக்கிறேன். தினகரன் என்ற ஒருவரை தனிமைப்படுத்தினால், அதிமுக ஒன்றிணைந்துவிடும். அப்போது சசிகலாவை தலைமையை நானும் ஏற்பேன்” என்று திவாகரன் தெரிவித்தார்.

