Asianet News TamilAsianet News Tamil

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற எம்எல்ஏ தகுதி நீக்கம் !! சபாநாயகர் அதிரடி !!

சொத்துக்குவிப்பு வழக்கில்  புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்துக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததையத்து அவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

 

disqualify of pondy mls akoke annand
Author
Puducherry, First Published Nov 8, 2018, 7:27 PM IST

புதுச்சேரி தட்டான்சாவடி தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர்  அசோக் ஆனந்த். இவருடைய தந்தை ஆன்ந்த், கடந்த 2007-2008 ஆண்டுகளில் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ.,க்கு புகார் சென்றது. 
disqualify of pondy mls akoke annand
இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ நடத்திய விசாரணையில் ஆன்ந்த் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் அசோக் ஆன்ந்த் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 3.17 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே ஆனந்த்தின் மனைவி விஜயலட்சுமி இறந்தார். அதனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 
disqualify of pondy mls akoke annand
இந்நிலையில், இந்த  வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிகள், அசோக் ஆனந்த் மற்றும் ஆனந்த் குற்றவாளிகள் என்று அறிவித்தனர். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கினர்.

disqualify of pondy mls akoke annand

இதையடுத்து ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்ற அசோக் ஆனந்த் எம்எல்ஏவின் பதவியை பறித்த அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் தட்டாசாவடி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சபாநாயகர்  கடிதம் எழுதியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios