Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களை நீக்கிவிட்டு, வடமாநிலத்தவரை பணியமர்த்த முறச்சி.? டோல்கேட் பிரச்சனையில், எகிறி பாய்ந்து வந்த சீமான்.

சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு ஏற்புடையதல்ல என்றும் தமிழர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அந்த இடங்களில் வடமாநிலத் தொழிலாளர்களை நிரப்ப திட்டமா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 
 
Dismissal of toll booth employees is not acceptable... Naam Tamilar Party coordinator Seeman condemned
Author
First Published Oct 7, 2022, 12:55 PM IST

சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு ஏற்புடையதல்ல என்றும் தமிழர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அந்த இடங்களில் வடமாநிலத் தொழிலாளர்களை நிரப்ப திட்டமா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

Dismissal of toll booth employees is not acceptable... Naam Tamilar Party coordinator Seeman condemned

இதையும் படியுங்கள்:  மருந்து இல்லன்னா அரசுதான் பொறுப்பு.. டாக்டர்கள் கிட்ட சீன் போடலாமா.? அமைச்சர்களை கழுவி ஊற்றிய ஆம்ஆத்மி.

உளுந்தூர்பேட்டையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரம்பலூரிலுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 54 பேரைத் தான்தோன்றித்தனமாக பணிநீக்கம் செய்திருக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் நடவடிக்கை அப்பட்டமான விதிமீறலாகும். பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அத்தொழிலாளர்களை விதிகளுக்கு மாறாக, நீக்கி அறிவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வடமாநிலத்தொழிலாளர்களைப் பணியமர்த்த முனைவதென்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படியுங்கள்: ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் ஸ்டாலின்.. முதலில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க.. VP.துரைசாமி

சாலையில் பயணிக்கக் குடிமக்களிடம் வரிவசூலிக்கும் சுங்கச்சாவடி எனும் கட்டமைப்பையே நாம் ஏற்கவில்லையென்றாலும், தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல! தங்களது பதவிநீக்கத்தை ரத்துசெய்து, பணிநிரந்தரம் செய்யக்கோரும் சுங்கச்சாவடி தொழிலாளர்களது கோரிக்கையும், அதனை வலியுறுத்திய அறப்போராட்டமும் மிக நியாயமானது. 

Dismissal of toll booth employees is not acceptable... Naam Tamilar Party coordinator Seeman condemned

ஆகவே, ஆளும் வர்க்கம் அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அதனை நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்துவதோடு, அத்தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios