நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வியை அடுத்து அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், அமமுக கூடாராமே காலியாகிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அமமுக அமைப்புச் செயலாளர் பொன்.த.மனோகரனை கட்சில் இருந்து நீக்கி டிடிவி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வியை அடுத்து அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், அமமுக கூடாராமே காலியாகிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அக்கட்சியின் முக்கிய நபராக கருதப்படும் மனோகரன் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அமமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் பொன்.த.மனோகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கிவைக்கப்படுகிறார். 

கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கேட்டுக்கொள்ளப்படுகிறது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டிடிவி.தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ உமாதேவன் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.