பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கொலைகாரர் என்று குறிப்பிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினைச் சேர்ந்த வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கொலைகாரர் என்று குறிப்பிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினைச் சேர்ந்த வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வன்னியரசு பேசிய வீடியோவினை இணைத்து பதிவிட்டுள்ளார். அதில் “தேவர் பெருமகனாரை இழிவாக பேசிய தீய சக்தியின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் இமானுவேல் சேகரனின் படுகொலையில் முக்குலத்தோரை அதற்க்கு காரணம்காட்டி செய்தி பரப்பியது. அதன் விளைவு முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பதினேழு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். முத்துராமலிங்கத் தேவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஆண்டே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது என பலரும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…

சாதியினை ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு, அரசியல் பலன் பெறுவதற்காக, அந்தச் சாதியினையே ஆயுதமாக கொண்டு காலம் தள்ளுவோரை என்னவென்று சொல்வது. பொது தலைவராக திருமா தன்னை காட்டிக் கொள்கிறார் அவரது கட்சி நிர்வாகி எதற்காக பசும்பொன் தேவரை இழிவு செய்ய வேண்டும்? தினகரசாமி எனும் நபர், அன்றைய காங்கிரஸ் முக்கிய தலைவர் ஒருவரின் கைக்கூலியாக செயல்பட்டதை நாடறியும். கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரத்தின் சட்ட மன்ற உரைகளை வன்னியரசு படித்தருப்பாரா..? தினகரசாமி தவிர்த்து ஒரே ஒரு ஆதாரத்தை வன்னியரசு தர முடியுமா..? எத்திராஜ் போன்றவர்கள் அரசு தரப்பில் வாதாடியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் தேவர்'' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…

தேவரை கொலைகாரர் என வன்னியரசு கூறி தமிழகத்தில் சாதிக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் வன்னியரசுவை கைது செய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.