சென்னையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழக்கத்திற்கு மாறாக இருக்கமான முகத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மூன்று நாட்களாக முகாமிட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சென்னை திரும்பினார். திரும்பிய உடனேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு சென்றுள்ளது. இதனை அடுத்து சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வருவதாக எடப்பாடி தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது. ஆனால் தனியாக எடப்பாடி மட்டும் வந்தால் போதும் என்று ஆளுநர் தரப்பில் இருந்து கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மொழி பெயர்ப்புக்கு ஒரு நபர் தேவை என்பதால் தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஜெயக்குமாரை மட்டும் அழைத்து வருவதாக கூறிவிட்டு அவருடன் எடப்பாடி ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டு தான் ஆளுநரை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். மேலும் ஆளுநருடனான சந்திப்பின் போது எடப்பாடி தரப்பு பெரிய அளவில் பேசவில்லை என்கிறார்கள். ஆளுநர் கூறுவதை ஜெயக்குமார் மொழி பெயர்த்து கூற அதனை கவனமாக எடப்பாடி கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். 

மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து டெல்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தற்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதாக ஆளுநர் தரப்பில் எடப்பாடியில் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்ததற்கான காரணமும் ஆராயப்பட்டு வருவதாக பீதி கிளப்பியுள்ளார் ஆளுநர் என்று கூறப்படுகிறது. 

ஆனால் தமிக அரசை காப்பாற்றிவிட்டதாகவும் உள்ளாட்சி தேர்தல் மூலமாக இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவிடலாம் என்று எடப்பாடி பதில் அளித்தாக சொல்கிறார்கள். ஆனால் அதில் ஆளுநர் பெரிய அளவில் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் மத்திய அரசின் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்று ஆளுநர் எடப்பாடியிடம் கூறியதாகவும் அதற்கு என்று தனி அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சந்திப்பு முழுவதும் மிகவும் இருக்கமான சூழலிலேயே நடந்ததாகவும் எடப்பாடியின் மனநிலையை அறியத்தான் இந்த சந்திப்பை ஆளுநர் ஏற்பாடு செய்ததாகவும் சொல்கிறார்கள். விரைவில் ஆளுநர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேச உள்ளாராம்.