மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்கள் கூடுதல் சுமைகளை ஏற்க வேண்டியுள்ளது என்பதால் அதனை ஈடுசெய்ய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஐநா கன்வென்ஷன் விதிகள் உள்ளது. இந்த கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு ஏற்றுள்ளதால் மத்திய மாநில அரசுகள் அதை சட்டமாக பாவித்து நடக்க வேண்டும். மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இயற்றியது. உணவு உரிமையை உறுதி செய்ய மாற்றுத்திறனாளிகளை தானாக உள்ளடக்கும் விதத்தில் சட்டமியற்ற எமது சங்கம் அப்போதே வலியுறுத்தியது. இயக்கமும் நடத்தியது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 

தற்போது இது தொடர்பான ஒரு வழக்கில்  மாற்றுத்திறனாளிகளையும் இணைத்திட சொல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை நிர்பந்தித்துள்ளது. அப்படி செய்யாவிடில் நீதிமன்றம் உத்தரவிடும் என எச்சரித்துள்ளது. இதன் விசாரணை செப்டம்பர் 29-இல் நடைபெற உள்ளது. ஆனால் கண்துடைப்புக்காக ஒரு நிர்வாக உத்தரவை மட்டும் பிறப்பித்து விட்டு மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது. நீதிமன்றம் அறிவுரைப்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசையும் எங்களது சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும் மத்திய பாஜக அரசு இந்திய விவசாயத்தை நிர்மூலமாக்கும் விதத்தில் மூன்று அவசர சட்டங்களை இயற்றியுள்ளது. இச்சட்டங்கள் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயத்தைத் தாரைவார்க்கும் விதத்தில் உள்ளன. இச்சட்டங்கள் மூலம் ரேஷன் திட்டத்தை நிர்மூலமாக்க உணவு உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்பாடு மறைமுகமாக உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அவசர சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறவும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்துகிறோம். எனதெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்று முழக்கங்களை எழுப்பினர்.