இயக்குநர் ப.ரஞ்சித் ராஜராஜ சோழனை மட்டும் தான் விமர்சித்தார். அவரது கருத்துக்கு பல மடங்கு மேலே போய் சேர சோழ, பாண்டிய மன்னர்களை குற்றம்சாட்டி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ.திருமாவளவன். 

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ப.ரஞ்சித் ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்.’ என்று பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையானதால் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஜாமின் கோடிய அவர், ’நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை’’ என தனது கருத்தில் இருந்து பின் வாங்கினார். 

இதுகுறித்து, கருத்துத் தெரிவித்துள்ள தொ.திருமாவளவன், ‘’ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள். சமஸ்கிருதமயமாக்கலுக்கு துணை போயிருக்கிறார்கள். தமிழ், மற்றும் தமிழ் கலாச்சாரம் சிதைந்து போயிருக்கிறது. அது மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருப்பதற்கு நம்முடையே மூவேந்தர்களும் காரணம்’’ எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ப.ரஞ்சித் ராஜராஜசோழனை மட்டும் தான் விமர்சித்தார். ஆனால் திருமாவளவன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை விமர்சித்து விட்டார் என விவாதத்தை கிளப்பி வருகிறார்கள்.