சென்னை, அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் மீது கல் எறியப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, கருப்பு ஆடு போராட்டத்துக்குள் புகுந்து கல் எறிந்து விட்டது என்று கூறினார். 

நாங்கள் துக்கத்தில், துயரத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் ஐபிஎல் கேளிக்கை ஆட்டம் தேவையா? என கேட்கத்தான் நாங்கள் பேரணி வந்தோம் என்றார்.

எங்கோ சில உணர்வு மீறல்கள் நடந்திருக்கலாம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கருப்பு ஆடு நுழைந்து கல் எறிந்து விட்டது., போராட்டத்தை திசை திருப்புவது அவர்கள் நோக்கம். போராடும் தமிழர்கள் இதை செய்யவில்லை.

போலீஸ் தடியடிக்கு நீதி கேட்காமல் போக மாட்டோம். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச உள்ளோம் என்று பாரதிராஜா கூறினார். 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றர். இந்த போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.