காவிரி, ஸ்டெர்லைட் ஆலை, துணைவேந்தர் நியமனம் ஆகியவை குறித்து அழுத்தமான கருத்தை பதிவு செய்ததாக ரஜினிகாந்திற்கு இயக்குநர் அமீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பல தரப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

திரைத்துறை சார்பிலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அறவழியில் மௌன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. விரைவில் மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு சம்பாதிக்க நேரிடும் என ரஜினி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் இயற்கையையும் சுற்றுச்சுழலையும் பாதிக்கும் எந்த திட்டமும் தேவையில்லை. அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை எனவும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்துவது சரியாக இருக்காது. அப்படியே நடத்தினாலும் சென்னை அணி வீரர்களும் ரசிகர்களும் கருப்பு பேட்ஜ் அணியலாம் எனவும் ரஜினி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் எந்த மாநிலத்தவரும் எங்கும் தொழில் செய்யலாம். எந்த பகுதியிலும் உயர் பதவியில் அமர்த்தப்படலாம். ஆனால், காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்திருக்க தேவையில்லை. நியமனம் செய்த தருணம் தவறானது எனவும் ரஜினி கருத்து தெரிவித்தார்.

அரசியல் பிரவேசம் எடுக்க உள்ள ரஜினிகாந்த், பொதுவாக எந்த பிரச்னை தொடர்பாகவும் வெளிப்படையான அழுத்தமான கருத்தை கூறுவதில்லை என்ற விமர்சனம் இருந்துவந்தது. ஆனால், காவிரி, ஸ்டெர்லைட், ஐபிஎல், துணைவேந்தர் நியமனம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக நேற்று வெளிப்படையாக அழுத்தமான கருத்துகளை முன்வைத்தார்.

காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திடவும், துணை வேந்தர் நியமனத்தை மறு பரிசீலனை செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிடவும், IPL ஐ தவிர்க்கவும் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்த திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்💐@rajinikanth @rajumahalingam @RIAZtheboss #IPL2018
— Ameer (@DirAmeer) April 8, 2018

இந்நிலையில், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் ரஜினி அழுத்தமான குரலை பதிவு செய்ததற்கு இயக்குநர் அமீர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.