Director Ameer says in a secial interview

ரஜினியை முதல்வராக தேர்ந்தெடுத்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று இயக்குனர் அமீர் பகிரங்கமாக எதிர்த்துள்ளார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிவிட்ட நிலையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ,அவர் கூறியதாவது; மதம் , இனம்,பேதமற்ற ஆன்மிக அரசியல் என்று தெளிவாக தனது ஆன்மிக அரசியலைப் பற்றி சொல்லிவிட்டார் ரஜினி. இதற்குப் பிறகு தனது கொள்கையைப் பற்றி ரஜினி என்ன வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அமீர், இதையெல்லாம் சொல்லிவிட்டு அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றார் என்பதில் தான் சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் ரஜினி தனது ஆன்மீக அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கையில் தமிழிசை, எச்.ராஜா மற்றும் குருமூர்த்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிப்பதால் பாஜக ரஜினியை இயக்குகேறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.



தமிழக மக்கள் நாளை ரஜினியை முதல்வராக தேர்ந்தெடுத்துவிட்டால்? அவருடைய வார்த்தையே தான் நான் திருப்பி சொல்கிறேன், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. தொடர்ந்து பேசிய அவர் ரஜினி பாஜகவை தொடர்ந்து பாராட்டி வருகிறவர், பாஜகவின் முகமாகத் தான் இருப்பார் என்றும் கூறினார். மேலும் பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று முதலில் டுவீட் போட்டவர் ரஜினி தான். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் வந்த போது மெளனமாக இருந்த ரஜினியால் தமிழகத்திற்கு எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என பகிரங்கமாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.