எது எப்படியோ...பிஜேபி பற்றி ரஜினியே போட்டுடைத்துட்டாரு..! இது போதும்டா சாமி..! சொன்னது யார் தெரியுமா ..? 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான சில முக்கிய கருத்துக்களை வெளியிட்ட பின்பு,   திரைப்பட இயக்குநர் அமீர் ரஜினியின் கருத்துக்குவரவேற்பு தெரிவித்து உள்ளார்.

தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்க பிடலாம் என்ற பரவலான கருத்து நிலவி வந்த நிலையில்,வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தன்னுடைய தெளிவான கருத்தை முன் வைத்து உள்ளார்.

அப்போது, 

பாரதிய ஜனதா எனக்கு எந்த அழைப்போம் விடுக்கவில்லை... உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை... திருவள்ளுவர் நாத்திகர் அல்ல' ஆத்திகர். கடவுள் நம்பிக்கை இருந்தவர். திருவள்ளுவர் போன்ற ஞானிகள் மதம் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்; பாஜக தனது டுவிட்டரில் காவி உடையுடன் வள்ளுவர் படத்தை வெளியிட்டது அவர்களது விருப்பம்; பேச வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு வள்ளுவர் விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாகி உள்ளது ஆபத்தான ஒரு விஷயம்....

மத்திய அரசு விருது அளிப்பதற்கு நன்றி; திருவள்ளுவருக்கு காவி பூசியது போல் என் மீது பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவருக்கும் எனக்கும் பாஜக சாயம் பூசும் முயற்சியில்  இருவருமே மாட்டிக்கொள்ள மாட்டோம்

தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது; அயோத்தி தீர்ப்பு பொறுத்த வரையில் எந்த தீர்ப்பு வந்தாலும், அமைதி காக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை; நான் எப்போதும் வெளிப்படையாக தான் பேசுவேன்; எம்ஜிஆர் முதல்வராகும்  வரையியில் நடித்துக்கொண்டு தான் இருந்தார்...நானும் அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப் படங்களில் நடிப்பேன் என தெரிவித்து இருந்தார். 

ரஜினியின் இந்த பேட்டி குறித்து திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவிக்கும் போது,

ரஜினிகாந்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர்ஸ்டாராக உட்கார வைத்து அழகு பார்ப்பவர்கள் தமிழக மக்கள்.அவருடைய படம் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதிக வசூல் பெறக்கூடிய அளவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்;மதசார்பற்ற மனிதராக பார்ப்பதுதான் மக்களுக்கு பிடித்து உள்ளது; பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடும் போது நமக்கு சந்தேகம் இருந்தது.. அவர் பாஜகவிற்கு சென்று விடுவாரோ என...

ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரலாம். அதை எதிர்க்கவில்லை. ஆனால் ஜனதா கட்சிக்கு முகமாக வரக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம்..இது தவிர்த்து பாஜக தமிழகத்தில் எப்படி எல்லாம் மாற்றம் கொண்டு வருகிறார்கள்? எப்படி எல்லாம் திணிக்கிறார்கள் என்ற ஒரு விஷயத்தை அவரே எடுத்துரைத்ததற்கு நான் மிகவும் பாராட்டுகிறேன் என தெரிவித்து உள்ளார்.