ஐ.பெரியசாமி காலில் திடீரென விழுந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன்- அதிமுகவினர் அதிர்ச்சி
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேவாலய விழாவில் அமைச்சர் ஐ பெரியசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் சந்தித்து கொண்டனர். அப்போது ஐ பெரியசாமி காலில் விழுந்து திண்டுக்கல் சீனிவாசன் மகன் ஆசிர்வாதம் பெற்றார்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள், ஒரே இடத்தில் சந்தித்து கொண்டால் கை கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள் அந்த வகையில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக்கும், திமுக கூட்டணி வேட்பாளரான கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திண்டுக்கல்லில் புகழ் பெற்ற 333 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாஸ்கு திருவிழாவானது நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விழாவானது நேற்று நடைபெற்றது. இந்த தேர் பவனி விழாவில் பங்கேற்க அமைச்சர் ஐ. பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஆலயத்தில் காத்திருந்தனர்.
வேட்பாளர்கள் சந்திப்பு
அப்போது அதே தேர் பவனி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக சார்பாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ் டி பி ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களான ராஜமோகன் மற்றும் இளைய மகன் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்தனர். அங்கு முன்னதாக காத்திருந்த ஐ. பெரியசாமி மற்றும் மார்க்கியூஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் இரு கட்சியை சேர்ந்த அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை நிமித்தமாக கை கொடுத்து நலம் விசாரித்து கொண்டனர். பின்பு இருக்கையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீ.சீனிவாசன் தனது இளைய மகன் சதீஷை அழைத்து ஜ. பெரியசாமி அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
அமைச்சரிடம் ஆசிர்வாதம்
அவர் அறிமுகமாகி திரும்பிய பின்பு தனது மகன் சதீஷை ஜ. பெரியசாமி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள் எனக் கூற சதீஷ் அமைச்சர் ஐ. பெரியசாமி காலில்விழுந்து ஆசீர்வாதம் பெற்றார், அரசியலில் எதிரியாக சுற்றி வரும் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பாரட்ட வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்