அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போன் காணமல் போனது தான் தற்போது தமிழக அமைச்சர்களிடையே ஹாட் டாபிக். 

தெரிந்தோ, தெரியாமலோ பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அவர் பேசியதும் சர்ச்சையானது. பொதுமேடையில் அவர் பேசியதெல்லாம் சர்ச்சையாகி வரும் நிலையில், பெர்சனலாக பேசும்போது எப்படியெல்லாம் உளறிக் கொட்டி இருப்பாரோ... 


இப்போது அவரது செல்போன் காணமல் போயிருப்பது அதிமுக சகாக்களை சங்கடத்த்தில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சியில் இருந்து இன்று காலை சென்னைக்கு விமானத்தில் வந்த போது அவரது செல்போன் காணமல் போனதா? அல்லது இவரே மறந்து வைத்து விட்டாரா என்பது தெரியவில்லை. விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது தான் தனது செல்போன் காணாமல் போய்விட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. பதறிப்போன அவர் எங்கெங்கோ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் விமானநிலைய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார். 

அமைச்சரின் செல்போன் காணமல் போனதில் அதிமுக மூத்த நிட்வாகிகள் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள். மேடைகளிலேயே உளறிக் கொட்டுபவர், செல்போனில் பெர்சனலாக பேசும்போது யாரிடம் என்னென்ன பேசித் தொலைத்தாரோ... யார் யாரிடம் பேசியதெல்லாம் ரெக்கார்ட் ஆகியிடுக்குமோ... தேர்தல் நேரத்தில் அப்படி அவர் பேசியதெல்லாம் வெளியே வந்தால் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுமே என கலங்கித் தவித்து வருகிறார்கள்.