Dindigul Srinivasan Minister of Forests Chennai has reportedly been admitted to the hospital due to diabetes and ear infections.

சென்னை தனியார் மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக அனுமதிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், அவர் சிகிச்சை பெற்று வெளியே வந்தார். அதைதொடர்ந்து அமைச்சர் வேலுமணி உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து அமைச்சர் வேலுமணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாஃபா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இதனிடையே திமுக முன்னாள் அமைச்சரான துரைமுருகன் மூச்சுதிணறல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது, சென்னை தனியார் மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக அனுமதிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சர்களின் அடுத்தடுத்து மருத்துவமனை விஜயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.