தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு அரசு அதிகாரிகள் சிலர் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

காஞ்சிபுரம் அருகே சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசு அதிகாரிகள் தற்போது இந்த அரசுக்கு போதிய அளவு ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில்  திமுக உள்ளிட்ட  பிற அரசியல் கட்சியினர் சொல்வதையே அரசு அதிகாரிகள் செய்து வருவதாகவும்  கூறினார்.

பெரும்பாலன அரசு அதிகாரிகள் தற்போது நடைபெற்று வரும் கழக ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்திலேயே பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளின் பயத்தை போக்கவும், அவர்களை ஒருமுகப்படுத்தவுமே தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடையில் ஓப்பனாக பேசினார்.