தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஆட்சி அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக்கொண்டார்.

லியோனியின் நியமனத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பொதுக்கூட்டங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நபரை பாடநூல் கழக தலைவராக எப்படி நியமிக்கலாம் என கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் இத்தகைய விமர்சனங்கள் குறித்து தான் பொருட்படுத்துவதில்லை என்றும் லியோனி விளக்கமளித்திருந்தார்.
