Asianet News TamilAsianet News Tamil

கூடிய சீக்கிரம் கட்சி நமக்குதான்... தீயா வேலை பார்க்கும் திவாகரன்! கைக்குள் வந்த 9 மாவட்டம்...

dinakarans uncle divakaran action against ADMK Party
dinakaran's uncle divakaran action against ADMK Party
Author
First Published Jan 3, 2018, 1:15 PM IST


ஒன்பது மாவட்டத்தை கைப்பற்றிய திவாகரன், அந்த மாவட்டங்களில் இருக்கும் எம்பி, எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக  வேலையில் தீவிரமாகிவிட்டாராம். ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று மன்னார்குடியில் தினகரனும், திவாகரனும் சந்தித்து கட்சி தொடர்பாக பேசி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்களாம்.

ஆளும் கட்சி, எதிர்கட்சி, தேசியகட்சி என ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டிய ஒரு சுயேட்சை MLA என்ற பெயரை எடுத்துள்ளார் தினகரன். இவர் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வானார். குடும்பத்தோடு குலதெய்வத்தை வழிபட சென்ற தினகரன், அங்கிருந்து மன்னார்குடி சென்று திவாகரனை சந்தித்திருக்கிறார்.

dinakaran's uncle divakaran action against ADMK Party

மன்னார்குடி மன்னைநகரில் திவாகரனுக்கு ஒரு பங்களா இருக்கிறது. வழக்கமாக புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று தனது ஆதரவாளர்களை இங்கேதான் சந்திப்பார் தினகரன். இந்த வருடம் தினகரனும் மன்னார்குடிக்கு வந்துவிட்டதால் அவரையும் அழைத்து மதிய விருந்து அளித்திருக்கிறார் திவாகரன்.

இந்த சந்திப்பின் போது திவாகரனிடம் மனம்விட்டு கும்ப விஷயத்தை பேசினாராம் தினகரன், கஷ்டப்பட்டு போராடி, குடும்பத்தில் இருப்பவர்கள் உதவி இல்லாமல் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுவிட்டபோதும் குடும்பத்தில் இன்னும் தன் மேல் கோபத்தில் இருப்பதாக சொல்லி வருத்தப்பட்டாராம் தினகரன். குறிப்பாக ஜெயா டி.வி சி.ஈ.ஓ விவேக்கைத்தான் குறிப்பிட்டு சொன்னாரராம், அதற்கு திவாகரனோ “எதைபத்தியும் கவலைப்படாதே, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்” என்று தைரியம் சொன்னாராம்.

dinakaran's uncle divakaran action against ADMK Party

மேலும் புதுக்கோட்டை, கரூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் திவாகரன் கட்டுப்பாட்டில் இருப்பது என்றும் இந்த மாவட்டங்களில் கட்சி விவகாரங்களை திவாகரன் கவனிப்பது என்றும் பேசினார்களாம்... இதனையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய தினகரன், ‘மாமா சொல்றபடி கேளுங்க. கட்சி கூடிய சீக்கிரம் நமக்குதான். அதனால எல்லோரும் தீயா வேலை செய்ங்க’ உற்சாகமாக பேசினாராம்.

முக்கியமான சில மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகள் வெளியானதால் படு குஷியில் இருக்கிறாராம் திவாகரன். அடுத்தகட்டமாக எம்பி, எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் படு பிசியாக வெளெய் பார்க்கிறாராம்.

Follow Us:
Download App:
  • android
  • ios