Dinakaran writes letter to legislative secretary
அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் தமக்கு வேண்டாம் என்று சட்ட பேரவைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார் சுயேச்சை MLA தினகரன்.
இப்படி, ஒரேடியாக 66 சதவீதம் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர் என இப்பட்ட ஒரு அறிவிப்பு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தமிழ சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போதே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், "தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையற்றது என்றார். மேலும், ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிராக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் மக்களுக்கு 70% கட்டண உயர்வு கூட்டி பெரும் சுமையை சுமத்திவிட்டு எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்த்தியுள்ளது. அரசின் ஈவு இரக்கமற்ற செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான். எனவே அப்படிப்பட்ட சம்பளமே எனக்கு வேண்டாம், அந்த சம்பளத்தை நாள் வாங்கப்போவதில்லை. உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும். நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை வஞ்சித்துள்ளது இந்த அரசு என கூறினார்.
இந்நிலையில், அது குறித்துச் சட்ட பேரவைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் தமிழக அரசில் நிதிப் பிரச்சினை நிலவும் நிலையில் ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தினகரன் இதனைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
