விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம்.எல்.ஏக்களுக்கான தீர்ப்பு சாதகமாக வரும் என நினைத்தோம். ஆனால் சாதகமாக வரவில்லை. 

ஆனாலும் மக்கள் வழங்கும் தீர்ப்பாக நாடாளுமன்ற தேர்தலும், அதன்பின் 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெறாவிட்டால் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும். இவர்களால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது. ஏனென்றால் ஆட்சி மீது மக்கள் அவ்வளவு வெறுப்புடன் உள்ளனர்.

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதால் தான் கூட்டணி அமைத்தாலாவது தலை தப்பிக்கும் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகும் அனைவருமே சுழியமாகப் போகிறார்கள். எத்தனை கட்சிகளை கூட்டணியில் சேர்த்தாலும் இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். கூட்டணியில் சேருவோருக்கும் டெபாசிட் கிடைப்பதே கடினம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நியாயமாக ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என்கிறார்கள். ஆனால், எம்.எல்.ஏக்கள் கேட்காமலேயே இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, பிஜேபி, தேமுதிக, பாமக உள்ளிட்ட காட்ச்சிகள் திமுகவோடு கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ள நிலையில், கூட்டணியில் சேருவோருக்கும் டெபாசிட் கிடைப்பதே கடினம் என தினகரன் இப்படி எச்சரிக்கை விடுத்திருப்பதால் அதிமுக தலைகள் மண்டை காய்ச்சலில் இருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல, நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளரான ஆண்டிபட்டி தங்கமும், உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் தெம்பு இருந்தால் குக்கர் சின்னத்தை கொடுத்து தேர்தலை சந்தித்து பாரு அதிமுக டெபாசிட் வாங்குதா என்று பார்ப்போம். இல்ல அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் வாங்குகிறாரா என்று பார்ப்போம் என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.