dinakaran totally upset regard jayatv not telecast his oath

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைகாட்சியாக விளங்கி வந்த ஜெயா டி.வி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து டி.டி.வி தினகரன் அணியை ஆதரித்து வந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இவர்கள் இருவரும் மாமன் மச்சான்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரும், ஜெயா தொலைக்காட்சியும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக எடப்பாடி – பன்னீர் அணி, தினகரன் அணியாக இரண்டாக உடைந்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது.

எப்படியாவது சசிகலா குடும்பத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜெயா டி.வியை தங்கள் வசமாக்க விவேக்கிற்கு பலவழிகளில் சிக்கலை ஏற்படுத்தியது. அப்போதும் கூட சசிகலாவை கழக பொதுச்செயலாளர் என்றும், தினகரனை துணைப் பொதுச்செயலாளர் என்றுமே குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டது ஜெயா டி.வி.

ஆர்.கே.நகரில் களமிறங்கிய சமயத்தில் ஜெயா டி.வி செய்திகளில் டி.டி.வி தினகரன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், வாக்கு எண்ணும் நாளில் ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கை செய்திகளில் வார்த்தைக்கு வார்த்தை ‘கழக துணைப்பொதுச்செயலாளர்' டி.டி.வி தினகரன் முன்னிலை என குறிப்பிட்டு வந்தது.

குடும்பத்தில் சண்டை....

தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால் சசி குடும்பத்தில் கலவரம் வெடித்தது. இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா தினகரனில் ஆதரவாளர் செய்தது நம்பிக்கை துரோகம் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனை அடுத்து, தொடர்ந்து குடும்பத்தில் சண்டை சச்சரவு என நீடித்து வந்தது. இதை வெளிபடுத்தும் விதமாக இன்று நடந்த தினகரன் பதவி ஏற்பு விழாவை ஏதோ சம்பிரதாயத்துக்காகக் காட்டுவதைப் போலக் காட்டிவிட்டு சைலன்ட் ஆனது. மற்ற ஜெயா டி.வியை விட மற்ற சேனல்களே அதிகமாக கவர் செய்திருந்தது.



இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருந்தது. சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளி வந்த சமயத்திலும் சரி... தினகரன் திகார் சிறையில் இருந்து சென்னைக்கு வந்தபோது ஜெயா டிவியில் நேரலையாக ஒளிபரப்பினார்கள். அதுமட்டுமல்ல மறுநாள் காலையிலிருந்து மாலைவரை திரும்பத்திரும்ப ரெகார்டு தேயும் அளவிற்கு போட்டு காட்டியது. தினகரன், ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரும் வரை லைவ் கொடுத்தார்கள். ஆனால், பதவியேற்பை சிம்பிளா முடித்துவிட்டது. சிறைக்குள் இருந்து வந்த உத்தரவால் இப்படியான அதிரடியில் இறங்கியிருப்பார் விவேக் தகவல்கள் கசிகின்றன.