Dinakaran Talk About in his Exclusive Interview

ஆர்.கே.நகரில் சசிகலாவின் பெயர், புகைப்படங்கள் அனைத்தையும் தினகரன் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது மக்களின் கோபம் இன்னும் தீரவில்லை என்பதற்காக அவர் அப்படி செய்வதாகவும் கூறப்பட்டது.

அதனால், அவரது குடும்ப உறவுகளே அதிருப்தி அடைந்து இருப்பதாகவும், சசிகலா இல்லாமல் தினகரன் எப்படி துணை பொது செயலாளர் ஆனார் என்று அவர்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தினகரன், ஆர்.கே.நகரில் சசிகலாவின் பெயரையோ, படத்தையோ இருட்டடிப்பு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தங்கள் தேர்தல் அறிக்கையில் கட்சியின் பொது செயலாளர் என்ற அடிப்படியில் அவரது பெயர், படம் ஆகியவை உள்ளது என்றும் கூறினார்.

மேலும், தற்போதும் வாரா வாரம், பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி என்பது ஜெயலலிதா இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அவர் அறிவித்த, செயல்படுத்திய நல திட்டங்கள் பற்றியே அதிகம் பேசப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கட்சி வேறு, உறவு வேறு என்றாலும், சசிகலா தம்முடைய சின்னம்மா என்பதால், அவரை எப்படி புறக்கணிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார் தினகரன்.