dinakaran supports siege in velumani house

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வேலுமனியின் வீட்டை தினகரன் ஆதரவாளர்கள் 30 பேர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு தினகரன் தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் போட்டி போட்டது. எனவே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இதையடுத்து இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றார்.

சிறைக்கு செல்லும் முன் இனி கட்சியில் ஈடுபட மாட்டேன் எனவும் அதிமுகவில் இருந்து விலகி விட்டேன் எனவும் பேட்டியளித்தார்.

இதைதொடர்ந்து 34 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் தினகரன். அவருக்கு அவருடைய ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேட்டியளித்த தினகரன் கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன் எனவும் அதிமுக தொண்டனாக இருந்து வேலை பார்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறிய நிலைப்பாட்டில் இருப்பதே அவருக்கு நல்லது என தெரிவித்தனர்.

இந்த பேட்டியின் போது அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, உள்ளிட்ட 17 அமைச்சர்கள் உடனிருந்தனர்.

பின்னர், பேசிய தினகரன் என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், நான் 60 நாட்கள் பொறுத்திருந்து அதிமுக செயல்பாடுகளை கவனித்து வருவேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வேலுமனியின் வீட்டை தினகரன் ஆதர்வாளர்கள் 30 பேர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.