dinakaran supporters protest against bjp

சில நாட்களுக்கு முன் டெல்லி நட்சத்திர ஓட்டலில் 1.30 கோடி ரூபாயுடன் சுகேஷ் சந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இரட்டை இலை சின்னத்தை பெற்று தர டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார்.

அதனடிப்படையில் டெல்லி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கில் தினகரனை மே 15 ஆம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது தினகரன் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தினகரன் கைது எதிர்ப்பு தெரிவித்து மதுரை பழங்காநத்தத்தில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தினகரன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து தினகரன் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது,

"மாபெரும் தலைவராக தினகரன் உருவெடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் பாஜக திட்டமிட்டு தினகரனுக்கு எதிராக சதித்திட்டத்தை தீட்டி பொய் வழக்கை போட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக எப்படி பொய் வழக்கு போட்டதோ அதே போல இப்போது பாஜக தினகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது"

இவ்வாறு அவர் கூறினார்.