ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன், முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரையும் நம்புவதில்லை.

தமது தனிப்பட்ட ஆதரவாளர்கள், மற்றும் வாரி இறைக்கப்படும் பணத்தை மட்டுமே நம்பி களத்தில் குதித்துள்ளார்.

மேலும், துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட தளவாய் சுந்தரம் மேற்பார்வையில்தான் பிரச்சார பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவரையும் தாண்டி "லட்சுமி" என்று அழைக்கப்படும் லட்சுமிபதிதான், தினகரனுக்கான அனைத்துமாக செயல்பட்டு வருகிறார்.

ஆதரவாளர்கள், தங்களுக்கு எது வேண்டுமானாலும், அதை தளவாய் சுந்தரத்திடம் கேட்க வேண்டும். அவர் அதை லட்சுமியிடம் சொல்வார், லட்சுமி, அவசியம் என்றால் அதை தினகரனிடம் சொல்வார்.

இவ்வாறு மூன்றடுக்கு அதிகார அமைப்புடன்தான், ஆர்.கே.நகரில் தினகரனில் தேர்தல் பிரச்சாரம், அவராலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் கூட, தளவாய் சுந்தரம் மூலம்தான் லட்சுமியை அணுக முடியும். அதனால், அவர்கள் எதுவாக இருந்தாலும், முதல்வரிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

இதை அறிந்து, அவர்கள் எல்லாம் என்ன முதல்வர் அணியா? என்றும் தினகரன் கோபப்பட்டுள்ளார்.

எனவே, தினகரனின் நிழலாக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கும் லட்சுமி, லட்சுமி என்றே ஓடுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.