தஞ்சாவூரில் கடந்த வாரம் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தினகரன், மு.க.ஸ்டாலினை செமையா கிண்டல் செய்து பேசினார். இதற்கு பதிலடி  கொடுத்த ஸ்டாலின், 20 ருபீஸ் தினகரன் என்றும், வாரா வாரம் பெங்களூரு சென்று நேத்திகடன் செலுத்தி வருபவர் என்று பேசினார்.

இந்நிலையில் தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய டி.டி.வி.தினகரன், இப்போது ஊராட்சிக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலின் அவர் அமைச்சராக இருந்த போது நடத்தியிருக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். இப்போது திருவாரூர் திண்ணையில் உட்கார்ந்து அயிர மீன் வித்துக்கிட்டிருக்கார் என்றும் கிண்டல் செய்தார்.

ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த பழம்பெரும் கட்சி திமுக எனவும் அவர் கிண்டல் செய்தார், நான் வாரா வாரம் பெங்களூரு போறேன் உண்மைதான் ஆனா உங்க தங்கச்சி திகார் ஜெயில்ல இருக்கும்போது நீங்க நேத்திக் கடன்  பண்ணலையா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நீங்க லண்டன் போறீங்களே அங்க என்ன நேத்திகடன் செலுத்துறீங்க ? என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்நது ஸ்டாலின் பேசுவது போல் மிமிக்ரி செய்து பேசியதை கூட்டத்தினர் கைதட்டி ரசித்தனர்,