dinakaran slams ops and eps

பதவியில் மட்டும் இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் பேச்சைக் கேட்பார்கள் என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், பதவியில் இருப்பதால்தான் கட்சியை உடைக்கிறார்கள். பதவியில் இல்லாமல் இருந்தால், சசிகலாவின் பேச்சை கேட்டு கட்சியில் பணியாற்றுவார்கள்.

போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின்போது அந்த பக்கமே செல்லாத இவர்கள், இனிமேல் ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாகக் கூறுவதற்கு தகுதியற்றவர்கள். மக்கள் நலனை காப்பதில் எல்லாம் இவர்களுக்கு அக்கறையில்லை. வடக்கே இருந்து யார் வந்தாலும் அவர்களின் காலை பிடிக்க தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு தினகரன் அதிரடியான கருத்துகளை தெரிவித்தார்.