ஏற்கனவே ஆர்.கே.நகரில்  உங்களின் கருத்துக் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கினேன். உங்களுக்கு அந்த  அனுபவம் இருந்தும், தைரியமாக இப்படி சொல்கிறார்கள் என செய்தி தொலைக்காட்சி நெறியாளரை தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கருணாநிதியின் வயது முதுமையும், ஜெயலலிதா இல்லாததாலும் தமிழகத்தின் இன்றைய  அரசியல் சூழலில் ,  நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சியும் தொடங்கிவிட்டனர்.  தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்? என்று கேட்டு  தமிழ் செய்தி தொலைக்காட்சி நடத்திய கணிப்பு நடத்திய கருத்துக் கணிப்பில்,  இதில் யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் செய்தி தொலைக்காட்சி  நடத்திய கருத்து கணிப்பில் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் 51 சதவீதத்துடன் ஸ்டாலினை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் 25 சதவீதத்துடன் முதல்வர் எடப்பாடியார் - துணைமுதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் ரஜினி  6 சதவீதம் ஆதரவு உள்ளது. கமலுக்கு 5 சதவீதமும் அன்புமணிக்கு 4 சதவீதமும் ஆதரவு உள்ளது. இதில் பாஜகவும் தேமுதிகவும் லிஸ்டில் வரவில்லை என இந்த கருத்துக்கணிப்பிற்கு அமமுக கட்சியின் தலைவர் தினகரன் கருத்துகணிப்பு நடத்திய தொலைகாட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விமர்சித்துள்ளார்.

எங்களுக்கு வெறும்  6 சதவீத வாக்கு இருப்பதாக நெறியாளர் தனது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட கணிப்புகள் உண்மையாகும்?  நெறியாளர்  இப்படிபட்ட கருத்து  திணிப்பதெல்லாம் சரியில்லை. இதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஏற்கனவே ஆர்.கே.நகரில்  உங்களின் கருத்துக் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கினேன். உங்களுக்கு அந்த  அனுபவம் இருந்தும், தைரியமாக இப்படி சொல்கிறார்கள்.

234 தொகுதிகளில் எங்கள் உறுப்பினர் சேர்க்கையே 30 ஆயிரம் 40 ஆயிரம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. சில தொகுதிகளில் 70,000த்தை தாண்டிவிட்டது.

ஆனால் எங்களுக்கு வாக்கு வங்கி வெறும் 6 சதவிகிதம்  குறைவாக இருப்பதாக கருத்து திணிப்பில் காட்டுகிறார்கள் என அந்த செய்தித் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பை தாறுமாறாக விமர்சித்துத் தள்ளியுள்ளார்.