மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தினகரன் எம்.எல்.ஏ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அஞ்சாத சிங்கமாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியுள்ளார். 

இதன்மூலம் தானும் ஜெயலலிதா மாதிரிதான் என தன்னை வீழ்த்த நினைக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு தினகரன் விடுத்திருக்கும் தகவலாகவும் பார்க்கப்படுகிறது.

துரோகிகளிடம் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் இருக்க வேண்டும் என்பதுதான் டெல்லியின் விருப்பம். தலைநிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவோம் என தினகரன் சூளுரைத்துள்ளார்.