Dinakaran overtake edappadi and OPS
தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களை வெளுத்தெடுக்கிறது கோடை வெயில். ஆனால் தமிழகம் முழுமையையும் வறுத்தெடுக்கிறது கோட்டை நோக்கிய அரசியல். இந்த நேரத்தில் ஆளும் அரசு, எதிர்கட்சிகள், நடிகர்களின் அரசியல் எண்ட்ரி ஆகியவை பற்றி பொது மக்களின் கருத்து என்னவாக இருக்கிறது? என்பதை அறிய வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு புலனாய்வு வாரமிருமுறை இதழ் நடத்திய மெகா கருத்துக்கணிப்பின் மூன்றாம் பாகம் இது...
பாலும் பழமும், ரெட்டை குழல் துப்பாக்கி- என்று அமைச்சர்களால் (மட்டுமே!) புகழ்ந்து பேசப்படும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு பல தடைகளையும், விமர்சன வியாக்யானங்களையும், கண்டனங்களையும், நக்கல் நய்யாண்டிகளையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்...
அ.தி.மு.க. அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு...
திருப்தியில்லை என்று 44.02 சதவீதத்தின பதில் சொல்லியிருக்கிறார்கள். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம் இந்த ஆட்சி மீது கடுப்பில் இருக்கிறார்கள். அதேபோல் இந்த ஆட்சி பரவாயில்லை என்று 26.52% பேரும், சுமார் என்று 24.79% பேரும் சொல்லியிருக்கின்றனர்.
இந்த ஆட்சி ’முழு திருப்தி’ என்று சொன்னவர்கள் ஐந்து சதவீதத்தை தாண்டவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமே.
அ.தி.மு.க. ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா?...என்று கேட்கப்பட்ட கேள்விக்கு...
விரைவில் கவிழும் என்று 41.36% பேர் சொல்லியிருக்கின்றனர், நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்கும் என்று 39.89% பேர் சொல்லியிருக்க, ஐந்து ஆண்டுகள் நீடிக்குமென 18.75% பேர் சொல்லியிருப்பதுதான் மேட்டரே.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும்?... எனும் கேள்விக்கு,
தி.மு.க. - காங்கிரஸ் அணி என்று 58.57% பேரும், தினகரன் அணி என்று 17.64% பேரும், அ.தி.மு.அ. என்று 11.59% பேரும், பா.ஜ.க. அணி என்று 12.20% பேரும் சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் அனல் ரிசல்டுகளைக் கக்கிக் கொண்டிருக்கிறது இந்த சர்வே ரிசல்ட். தற்போதைய ஆட்சி பற்றி மக்கள் மனதில் இருக்கும் கால்குலேஷனையும் ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த சர்வேயின் ரிசல்ட்டின் மூலம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அமைக்கும் அணி மற்றும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. ஆகியவற்றை விட ஒரேயொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வை கொண்டிருக்கும் தினகரன் கட்சியானது மிகப்பெரிய வலுவுடன் இருப்பது புரிகிறது.
தமிழக அரசியலில் இது ஒரு விநோத சூழ்நிலைதான்.
