Asianet News TamilAsianet News Tamil

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சசிகலாவுடன் தினகரன் தீவிர ஆலோசனை!!

dinakaran meeting with sasikala in prison
dinakaran meeting with sasikala in prison
Author
First Published Aug 2, 2017, 4:58 PM IST


ஆகஸ்ட் 5 ஆம் தேதி தலைமை கழகம் சென்று பணியாற்றுவேன் என டிடிவி தினகரன் கூறியுள்ள நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் திரும்பினார்.

இதனால் எடப்பாடி அமைச்சரவை தினகரனை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தது.

dinakaran meeting with sasikala in prison

ஆனால் ஒபிஎஸ் அணி கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும், இதுவரை எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

டிடிவி ஜாமினில் வெளியே வரும் வரை அதிமுகவின் இரு கட்சிகளும் இணையவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன், கட்சி இணையவில்லை என்றால் மீண்டும் கட்சி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

dinakaran meeting with sasikala in prison

ஆனால் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில் கட்சி பணியாற்றுவேன் எனவும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தலைமை கழகம் வருவேன் எனவும்டிடிவி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து டிடிவி ஆலோசனை நடத்தி வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios