Asianet News TamilAsianet News Tamil

ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் தினகரன்! ஸ்லீப்பர் செல்களை களையெடுக்கும் எடப்பாடி... அடுத்தடுத்து அரசியல் திக் திக்

கடந்த 2 நாட்களாக அதிமுக - அமமுக தரப்பில் நடந்து வரும் முட்டல் மோதல்தான் இந்த குரலுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தனபாலிடம் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த மனுவின்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை ஏன் என தெரியவில்லை, ஒருவேளை அமமுகவை கட்சியாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளது காரணமாக இருக்கலாம் என அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

Dinakaran Master Plan against Edappadi palanisamy
Author
Chennai, First Published Apr 27, 2019, 8:29 PM IST

கடந்த 2 நாட்களாக அதிமுக - அமமுக தரப்பில் நடந்து வரும் முட்டல் மோதல்தான் இந்த குரலுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தனபாலிடம் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த மனுவின்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை ஏன் என தெரியவில்லை, ஒருவேளை அமமுகவை கட்சியாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளது காரணமாக இருக்கலாம் என அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

18 தொகுதி தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்து நடக்கவிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2 வருஷம் எந்தவித இடையூறுமின்றி ஆட்சியை நடத்திடனும், அதில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்று கூறிவருகிறாராம். தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சியைக் கவிழ்க்க நம் கட்சியிலிருப்பவர்களே காரணமாகிவிட்டால் என்ன செய்வது?  என அதற்கான யோசனையில் இறங்கியுள்ளாராம்.

Dinakaran Master Plan against Edappadi palanisamy

இதன் முதல்கட்டமாக தினகரன் & கேங் மூச்சுக்கு மூச்சு சொல்லிவந்த ஸ்லீப்பர் செல்ஸ் என சொல்லப்படும் எம்.எல்.ஏவாக இருப்பவர்களைக் களையெடுக்க வேண்டும். அதுதான் ஆட்சியை வலுப்படுத்தும் என்று அவர் நம்புகிறார் எடப்பாடி. அதன்படிதான், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன்  ஆகியோருக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸ். மேலும், `கட்சியோடு இருந்து, ஆட்சிக்கு ஆதரவா இருந்தீங்கன்னா, இரண்டுவருஷம் எம்.எல்.ஏவா இருக்கலாம். இல்லன்னா உங்க கதியும் அந்த 18, எம்.எல்.ஏ-க்கள் மாதிரி ஒன்னுமில்லாம ஆகிடும் என்று எச்சரித்தாராம்.

இதனால், பதறியடித்த விருத்தாசலம் கலைச்செல்வன்;  மக்கள் எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கினார்கள். நான் இன்று வரை அதிமுகவுக்கு  அரசுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். எப்போதுமே இந்த அரசுக்கு எதிராகவோ, அதிமுகவுக்கு எதிராகவோ எந்தச் செயலிலும் நான் ஈடுபட்டதில்லை என்று உறுதியளித்துள்ளார். இதே போல விளக்கத்தையும் மற்ற இரண்டு பேரும் கொடுத்துள்ளார்கள்.

Dinakaran Master Plan against Edappadi palanisamy

இவர்கள் பேசியதெல்லாம், தினகரனின் பக்கா ஸ்கெட்ச்  என்கிறார்கள் அமமுக முக்கிய புள்ளிகள்,  அதாவது நீங்க உங்க எம்.எல்.ஏ பதவிய விட்டுட்டு வர வேண்டாம். அதிமுகவுலே இருங்க. எதற்காகவும் அவசரப்பட்டு வெளியே வர வேண்டாம். ஆட்சிக்கு ஆதரவு தரோம்னு  தெளிவா சொல்லிடுங்க. எதிர்பார்க்காத நேரத்துல அவங்களுக்கு சரியான பாடம் கத்துக்கொடுக்கணும் என்று தினகரன் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தனது அடுத்த அடுத்த பிளானை இம்ப்ளிமென்ட் பண்ணப்போகும் தினகரன், எடப்பாடி என்ன விலை கொடுத்தாவது முதலமைச்சர் பதவியில ஒட்டியிருக்கணும்னு நினைக்கிறாரு. அதனால் அவர் ஒரு முடிவு பண்ணிட்டாரு. உங்க 3 பேரையும் தகுதி நீக்கம் பண்ணிடுவாரு. ஆகவே நான் சொல்றதை அப்படியே மீடியா முன்னாடி சொல்லிடுங்க. ஆனா 3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படப் போறது உறுதி. அதனால அந்த 3 தொகுதியிலயும் தேர்தல் வந்தா நாமதான் ஜெயிக்கணும். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிக்க சொல்லிடுங்க செம்ம கூலாகவே சொன்னாராம் தினகரன்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios