எடப்பாடி மற்றும் பன்னீர் நடத்தும் பொதுக்குழுவுக்கு போட்டியாக செய்தியாளர் குழுவை கூட்டி வறுத்தெடுத்து வருகிறார் தினகரன். 

பொதுக்குழு தீர்மானங்களை மிக மிக அலட்சியமாக அவர் வறுத்தெடுத்து வருவதன் ஹைலைட் பாயிண்டுகள்:

*    நடப்பது பொதுக்குழுவே அல்ல! எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரும் நடத்தும் நிகழ்ச்சி அவ்வளவே!

*    தன்னை முதல்வர் பதவியில் அமர்த்திய  சின்னம்மாவிடமே இவர்கள் நன்றியை   காட்டவிலலியென்றால், மக்களுக்கு எந்த நன்மையை செய்வார்கள்?    

*    நான் நேற்றே கூறியது போல் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய பணிகளை துவக்கிவிட்டேன். 

*    கழகத்தின் 95% தொண்டர்கள் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். 

*    பொதுச்செயலாளராக அம்மா அமர்ந்த இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்க மனமில்லாத  பழனிசாமியும், பன்னீரும், அம்மா அமர்ந்திருந்த  முதல்வர் பதவியில் மட்டும் ஒட்டியிருப்பது ஏன்?   நல்லவர்கள் என்றால் அதை         உதறவேண்டியதுதானே!?

*    கட்சியின் சின்னமான இரட்டை இலை முடங்க  காரணம் பன்னீர்செல்வமே!

*    நாங்கள் தி.மு.க.வுடன் கைகோர்த்திருப்பதாக   சொல்வது பொய்.

*    மீண்டும் அம்மாவின் நல்ஆட்சி தமிழகத்தில் நிறுவப்படும்.