Dinakaran goal is to dissolve rule in Tamil Nadu Khushboo Action!
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு டிடிவி தினகரன் அல்ல என்றும், தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பது என்ற எண்ணம்தான் என்றும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மிகப் பெரிய தலைவர். ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவைவிட, தினகரன் அதிகம் ஓட்டு பெற்றுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது அவரை தான் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறேன்.
ஆர்.கே.நகரில், திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் கூட வாங்கவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு, எப்படியாவது இந்த எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று டிடிவி தரப்பு கூறி வருகிறது.
எடப்பாடி-பன்னீர், ஜெயலலிதாவுக்கு துரோகமிழைத்துள்ளனர் என்றும் கூறி வருகிறது. எனவே தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பது என்ற எண்ணம்தான். இதனால் தினகரன் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. திமுக, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆர்.கே.நகரில், 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து நாங்கள் மக்களிடம் வாக்குகள் கேட்கவில்லை. ஆனால், பாஜக தொடர்ந்து 2ஜி வழக்கைப் பற்றி மட்டுமே பேசி வாக்கு சேகரித்து வந்தது. டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அல்ல என்றும் ஜெயலலிதாவைவிட தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது குஷ்பு கூறினார்.
