dinakaran criticize governor and palanisamy lead government

தமிழ்நாட்டில் ஆளுநரும் சரியில்லை; அரசாங்கமும் சரியில்லை என தினகரன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த அ.தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை. ஆனால் அவர்கள் இதற்காக பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக பல நாட்கள் யோசித்துள்ளார்கள். மக்கள் இதை புரிந்து உள்ளார்கள். அவர்களை அப்புறப்படுத்துவார்கள்.

தமிழகத்தில் ஆளுனரும் சரியில்லை, அரசாங்கமும் சரியில்லை. தேர்தல் வந்தால் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். ஆளுனரால் பதவிக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவரே திரும்ப செல்ல வேண்டும். ஆளுனரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் தரம் தாழ்ந்த மனநிலையில் உள்ளவர்கள் அநாகரீகமாக பேசுகிறார்கள். அவர்களின் உண்மை முகம் தற்போது வெளியில் தெரிகிறது. தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் தமிழகத்தில் வளர முடியவில்லை என்ற விரக்தியில் பேசுகிறார்கள் என தினகரன் விமர்சித்தார்.