Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கட்சிகளை அதிரவைத்த ஹவாலா ஸ்டைல்... திருமங்கலம் ஃபார்முலா இல்ல இது " தினகரன் ஃபார்முலா"!

Dinakaran create hawala Style in RK Nagar By election
Dinakaran create hawala Style in RK Nagar By election
Author
First Published Dec 26, 2017, 12:31 PM IST


தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகரில் திமுக பெற்றிருக்கிறது போதாதற்கு டெபாசிட் தொகையை இழந்துள்ளது ஆர்.கே.நகரில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை திமுகவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். 

"வைட்டமின் ப" திருமங்கலம் ஃபார்முலா

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலா என்ற புதிய சொல்லை திமுக உருவாக்கியது. அதே பாணியின் ஆர்.கே. நகரில் ஹவாலா ஸ்டைலில் பணம்கொடுத்து தினகரன் ஃபார்முலா என்ற தீய சொல்லை எழுதியுள்ளனர். ஆர்.கே.நகரில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த தினகரன் குழுவினர், 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்வதாக உறுதியளித்தே  மக்களை நம்பவைத்து ஏமாற்றி உள்ளனர் அரசியல் கட்சிகள் புகார் எழுப்பி வருகின்றனர்.

Dinakaran create hawala Style in RK Nagar By election

"திருமங்கலத்தில் விதைத்ததை, ஆர்.கே நகரில் அறுவடை"

இடை தேர்தலை வைத்து ஒரு கட்சியின் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது என்பது திருமங்கலம் பார்முலா உணர்த்தும் பாடமாக இருக்கலாம். ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றிருப்பது பல கேள்விகளை எழுப்புவதுபோல, திமுக டெபாசிட் இழந்திருப்பதும் அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிமுக இரண்டு அணிகள் சிதறிக்கிடக்கும் நிலையில், திமுக கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் பாதி அளவுக்கு கூட பெற முடியாமல் டெபாசிட் இழந்திருப்பது, அந்த கட்சியின் எதிர்காலம், ஸ்டாலினின் தலைமை குறித்தும் யோசிக்க வைத்துள்ளது.

Dinakaran create hawala Style in RK Nagar By election

அதிமுக பிளவுபட்ட நிலையிலேயே திமுகவால் வெற்றி பெற முடிய வில்லை என்றால், அதிமுக மீண்டும் ஒன்று பட்டால், திமுகவின் நிலை எப்படி இருக்கும் என்று யோசிப்பதில் தவறு இல்லையே. சென்னை என்பது திமுகவின் வலுவான கோட்டை. அந்த கோட்டையில் திமுக தோற்பது தவறல்ல. ஆனால் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தோல்வியை சந்தித்தது எப்படி? தினகரன் செய்தது என்ன?

பூத்துக்கு 300 பேர் (172 X 300 = 51600 பேர் ) இதில் கூட குறைவாக சுமார்40,000 பேர்  தேர்தல் களத்தில் வேலை பார்த்து இருக்கிறார்கள். இவர்களுக்கு தினமும் 300 ரூபாய் (40,000 X 300 x 10 நாள் = 12,00,00,000 ரூபாய்.

Dinakaran create hawala Style in RK Nagar By election

அதுமட்டுமல்ல, எல்லா வீட்டிலும் ஹவாலா ஸ்டைலில் இருபது ரூபாய் கொடுத்து  தேர்தல் முடிந்து வெற்றி பெற்றால் ஓட்டுக்கு சுமார் 10,000 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

தினகரன் சொன்னதை செஞ்சிடுவாருன்னு தொகுதி முழுதும் ஒரே பேச்சு. சொன்னபடி 150 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். தேர்தல் செலவு மற்றும் மறைமுக வேலைகள் செய்ய வெளியூரிலிருந்து சுமார் நாப்பதாயிரம் பேர் காலத்தில் இறக்கினார் குக்கர் தினகரன்.

Dinakaran create hawala Style in RK Nagar By election

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலா போல ஆர்.கே. நகரில் ஹவாலா ஸ்டைலில் பணம்கொடுத்து "தினகரன் ஃபார்முலா"  உருவாக்கியுள்ளனர். ஆக, திருமங்கலத்தில் விதைத்ததை திமுக, ஆர்.கே நகரில் அறுவடை செய்திருக்கிறது!

Follow Us:
Download App:
  • android
  • ios