Dinakaran confirmed No confidence vote will happen in us
குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிக்கும் பழனிச்சாமியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என தினகரன் தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தின்மூலம் நியாயத்தை பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயமாக கலந்துகொள்வார்கள் எனவும் குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பழனிச்சாமியின் முயற்சி தோல்வியடையும் எனவும் தெரிவித்தார்.
