dinakaran challenge palanisamy
வீரத்தமிழனாக இருந்தால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என தினகரன் சவால் விடுத்துள்ளார்.
சசிகலாவால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்து எடப்பாடியால் முதல்வராக முடியுமா? என தினகரன் ஏற்கனவே சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடியாருக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். வீரத்தமிழனாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சேலத்தில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா?
