Dinakaran and Vijayawal police are planning to arrest this evening
துண்டு பிரசுரம் விநியோகம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன், வெற்றிவேல் உள்ளிட்ட 17 பேர் இன்று மாலைக்கு கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமிக்கு அவதூறு ஏற்படும் வகையில் சேலத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.
வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் விநியோகித்த துண்டு பிரசுரங்களில், தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சரவணன் போலீசில் புகார் செய்திருந்தார்.
டிடிவி தினகரன், வெற்றிவேல், புகழேந்தி, செல்வம் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தினகரன் மற்றும் புகழேந்தியை இன்று மாலைக்கு கைது செய்துவிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
